ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!! கையில் அருவாளுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!!

0
120
Jailer Movie New Poster Released!! Rajinikanth standing with Aruval in hand!!
Jailer Movie New Poster Released!! Rajinikanth standing with Aruval in hand!!

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!! கையில் அருவாளுடன் கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார்.

இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. இதன்பின்பு ரஜினி கோலமாவு கோக்கிலா,பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அவர் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில்  நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடக்கும் பட்சத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரானா ஷிவ ராஜ்குமார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீடு விழா மிக பிரமாண்டமாக ஜூலை மாதம் நடத்த இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான “காவாலா”  என்ற பாடல்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்தநிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் அவர்கள் கையில் அருவாளுடன் இருப்பது போன்று உள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு தரமான ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த புதிய போஸ்டரால் ரசிகர்களிடையே படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிக அளவில் கிளம்பியுள்ளது.

Previous articleபிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!
Next article47 கிராமங்கள் நீரில் முழ்கிய அவலம்!! இந்த மாநில மக்களை மீண்டும் கவலைடையச் செய்துள்ளது!!