மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்”படத்தில் பாடல் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

0
107

 

 

 

மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்” படத்தில் பாடல் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரத்தமாரே’ பாடல் AI தொழில்நுட்பத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் உருவாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாடல் யூடிப் பக்கத்தில் வெளியாகி பல லட்சப் பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

 

இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல், குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. உண்மையாகவே பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

 

 

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் துடிப்பான நடிப்பில் திரையில் படம் வெளியாகி படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

 

 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்துடன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் கூட்டணி முடிந்தது என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் பாடல் வெளியாகி உள்ளது, ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு வரப்பிரசாதம் தான் என்று கூறுவது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் பல்வேறு விஷயங்களை இயக்குநர்கள் புகுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

மறைந்த நடிகர்கள், நடிகைகள் கூட உயிருடன் திரையில் தோன்றி நடித்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கவும் தமிழ் சினிமா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிட்டுத்தக்கது.

 

 

 

Previous articleபுக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 
Next articleநம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!