அதிரடி காட்டிய ஜெய்ஸிவால்… 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா!!

Photo of author

By Sakthi

அதிரடி காட்டிய ஜெய்ஸிவால்… 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 பேட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸிவால் அவர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நான்காவது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்12) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 61 ரன்களும் சாய் ஹோப் 45 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கேப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல், முகேஷ் குமார், சஹால் மூவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து இந்திய அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிம இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸிவால் அவர்கள்சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

தொடக்க வீரர்கள் ஜெய்ஸிவால் மற்றும் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸிவால் அரைசதம் அடித்து 84 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதையடுத்து 17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 179 ரன்கள் எடுத்து நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை யஷஸ்வி ஜெய்ஸிவால் கைப்பற்றினார். இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சயநிலையில் உள்ளது.