மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் : பிரதமர் கோரிக்கை!!

0
31

 

 

 

மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் : பிரதமர் கோரிக்கை

 

 

வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் சுதந்திரக் கொடியை ஏற்ற வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளன.

 

 

மத்திய அரசு சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

 

 

 

இந்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்ற ஆண்டு நாட்டு மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதுபோலவே இந்த ஆண்டும் மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

‘சுதந்திர தின அமுத பெருவிழா’ என்ற தலைப்பில் சுதந்திர விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் சுதந்திர தினத்தன்று தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் மூவர்ண தேசியக் கொடி முன்பு நின்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் இந்த கோரிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் உள்ள நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

இதனிடையே ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்க, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

 

author avatar
Parthipan K