ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்!

0
196
Jaljeevan Project ₹ 1000 for home water connection! Collection of Panchayat Administrators Exposed!
Jaljeevan Project ₹ 1000 for home water connection! Collection of Panchayat Administrators Exposed!

ஜல்ஜீவன் திட்டத்திற்கு ₹1000 கொடுத்தால் தான் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு! ஊராட்சி நிர்வாகிகளின் வசூல் வேட்டை அம்பலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கோட்டை தெரு பகுதியில் மதிய அரசு திட்டத்தின் மூலம் தமிழக அரசு இணைந்து ஜல்ஜீவன் திட்டம் என்ற பெயரில் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த சேவையானது முற்றிலும் இலவசம் வழங்கக்கூடிய ஒன்று.இதில் வீட்டிற்கு தனியாக இணைப்பு வேண்டுவோர் ₹1000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வழங்கப்படும் என மத்தூர் ஊராட்சி நிர்வாகிகள் பணத்தை வசூல் செய்ததாகவும்,பணம் வழங்கியவர்களுக்கு மட்டுமே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பணம் வாங்கி இணைப்பு வாங்கிய நபர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் ரசீது கேட்டு பலமுறை அலைந்து இதுவரை தங்களுக்கான பதில் கூறவில்லை எனவும் அரசு திட்டத்திற்கு பணம் கொடுத்தால் மட்டுமே எங்களால் பயன்பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மற்றும் வட்டாட்சியர் இடமும் விசாரித்ததில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பணம் வசூலிப்பதில்லை எனவும் இது தவறான நடவடிக்கை எனவும் வரும் ஆண்டுகளில் இருந்து ஜல்ஜீவன் திட்டத்திற்கு பயனாளிகள் பணம் கட்ட வேண்டும் என்ற விதி இன்னும் செயல்பாடுகளுக்கு வருவதற்கு முன் இது போல் நடைபெற்றது வருத்தம் என தெரிவித்தனர்.

Previous articleவெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலவு குறைவு காரணமாக காலமானார்!
Next articleமாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!