#Jallikattu: சென்னையில் ஜல்லிக்கட்டு அதுவும் எனது தலைமையில்.. கார்த்தியின் ஓபன் டாக்!!

Photo of author

By Rupa

 

 

 

 

சென்னையில் நேற்று முதல் கிராமத்து திருவிழாவை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செம்பொழில் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனை நடிகர் கார்த்திக் துவக்கி வைத்தார். மேற்கொண்டு இந்த திருவிழாவில் கிராமத்து உணவு பழக்க வழக்கங்கள் தானியங்கள் கால்நடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி பழங்காலத்து கலை அனைத்தையும் இதில் ஈடுபடுத்தி உள்ளனர்.

நேற்று இந்த விழாவை நடிகர் கார்த்தி தொடங்கி வைத்ததோடு செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கோடை விடுமுறைக்கு ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்வோம் மீண்டும் வரும்பொழுது எங்களுக்கு மனதே இருக்காது. அதனை மையப்படுத்தி தான் முதலில் கடைக்குட்டி சிங்கம் படமும் அமைந்தது. அதன் வகையில் தற்பொழுது மெய்யழகன் கதை நன்றாக வந்துள்ளது எனக்கு கூறினார்.

குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் படம் முடிந்தவுடன் விவசாயிகள் பலரை அழைத்து இது குறித்து ஆலோசனை கூட செய்தோம். கொரோனா காலகட்டத்தால் அனைவரையும் ஒன்றிணைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால் மக்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி மிகவும் பாராட்டத்திற்குரியது. இதனை ஏற்பாடு செய்த குழுவிற்கு மிகவும் நன்றி. கட்டாயம் என் குடும்பம் மற்றும் குழந்தைகள் அனைவரையும் கூட்டி வந்து இதனை காட்டுவேன்.

மேற்கொண்டு அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் சென்னையில் ஜல்லிக்கட்டு ஏதேனும் உங்கள் தலைமையில் நடத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்றால் அதற்கு அதிகளவு கட்டுப்பாடுகள் உள்ளது. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு நடக்கும் பொழுது எனது மாடும் அதில் பங்கேற்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள், அவ்வாறு அதை நடத்துவது மிகவும் எளிதான ஒன்று கிடையாது.

மெய்யழகன் படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் ஜல்லிக்கட்டு எப்படி நடக்கிறது? யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியான “செம்பொழில்” திருவிழாவை கட்டாயம் மக்கள் கண்டு களித்து பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.