ஜமேஷா முபின் வீட்டில் சிக்கியது அதி பயங்கர வெடி பொருள்! நல்லவேளை இது நடக்கல பெருமூச்சு விட்ட காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தங்கி இருந்த இடங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1.5 கிலோ பெண்டா எரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட் என்ற அதி பயங்கர வேதிப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது பெண்டா எரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் என்பதை சுருக்கமாக பிஈடிஎன் என்று குறிப்பிடுவார்கள். இந்த வேதிப்பொருளை பென்ட் பெந்தா, பி இ என், கொர்பெண்ட் பென்தரைட் என பிற பெயர்களிலும் குறிப்பிடப்படுவது உண்டு.

இது நைட்ரோ கிளிசரின், நைட்ரோ செல்லோஸ் குடும்ப வகையை சார்ந்தது என்று வேதியியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். பென்டா என்பது ஐந்து கரிம அணுக்களை உள்ளடக்கியது. இதன் வீரியம் அதிகம் மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களில் ஒன்றான இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெடிகுண்டு டிஎன்டி, ஆர்டிஎஸ் ரக வெடிகுண்டுகளை விட பல மடங்கு வீரியம் உள்ளது என்று கூறப்படுகிறது.

முதன் முதலில் ஜெர்மனி வெடிபொருள் உற்பத்தி நிறுவனம் தான் பிஈடிஎன் வெடி பொருளை 1894 ஆம் ஆண்டு கண்டறிந்தது இதன் உற்பத்தி 1912ல் ஆரம்பமானது. ஜெர்மனி அரசு அந்த நிறுவனத்திற்கு வேதிப் பொருட்களுக்கான காப்புரிமை வழங்கியுள்ளது.

முதல் உலகப்போரின் போது ஜெர்மனி ராணுவம் பி இ பி என் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை பயன்படுத்தியுள்ளது. அதன் பிறகு இதன் பயன்பாடு உலகம் முழுவதும் பரவியது. வணிக ரீதியாக விற்பனையும் ஆரம்பமானது. இதன் விற்பனைக்கு பல நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆகவே இந்த வேதிப்பொருள் பெரும்பாலும் கள்ளச் சந்தை மூலமாகவே விற்கப்படுகிறது.

இந்தியாவில் ராணுவம் மற்றும் சுரங்க தொழிலில் மட்டுமே சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மோப்பநாய், எக்ஸ்ரே மற்றும் மாற்ற பாரம்பரிய உபகரணங்களை பயன்படுத்தி இந்த வேதிப்பொருளை எளிதாக கண்டறிய இயலாது. ஆகவே பாதுகாப்பு சோதனைகளை எளிதாக கடந்து பல பகுதிகளுக்கும் பயங்கரவாதிகள் எடுத்துச் செல்கிறார்கள். சில சமயங்களில் விமானம் மூலமாகவும் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு விபத்தில் 17 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் பிஇடிஎன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீரில் இருக்கின்ற பயங்கரவாதிகள் பல சமயங்களில் இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி வெடிகுண்டு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்கள். புனேவில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு நிகழ்வும் இந்த வெடிகுண்டு வகையை சார்ந்தது தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜமேஷா முபின் தான் வாங்கி வைத்திருந்த பிஈடிஎன் வேதிப்பொருளை நல்ல வேலையாக பயன்படுத்தவில்லை பயன்படுத்தி இருந்தால் விளைவுகள் மிக மோசமாக இருந்திருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.