ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

Photo of author

By அசோக்

ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிஸ்னஸில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!…

அசோக்

jananayagan

கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். அஜித்தை வைத்து வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்ட நிலையில் இது அவரின் கடைசி திரைப்படமாகும். எனவே, விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தில் ரீமேக் என்கிறார்கள்.

அதேநேரம் தமிழுக்கு ஏற்ற்படி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக விஜய் அரசியலுக்கு போகவுள்ள நிலையில் ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வு பற்றிய காட்சியெல்லாம் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 2026ம் வருட பொங்கலூக்கு ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், பட ரிலீஸுக்கு முன்பே ஜனநாயகன் படம் பல கோடிகளை அள்ளியிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடிக்கு வாங்கியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி 55 கோடிக்கு வாங்கியிருக்கிறது.. எனவே, ரிலீஸுக்கு முன்பு ஜனநாயகன் படம் 176 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறது. இது இல்லாமல் தியேட்டர் மூலம் கிடைக்கும் வசூல், மற்ற மொழி உரிமைகள் என கணக்கு போட்டு பார்த்தால் ஜனநாயகன் படம் 700 கோடி வரை வசூல் செய்யும் என்றே கணிக்கப்படுகிறது.