கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
முதலில் இப்படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொன்னார்கள். அந்த படத்தில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில்தான் தமிழில் விஜய் நடிக்கிறார் என்றார்கள். ஆனால், வெளியான புதிய போஸ்டர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல காட்சிகள் இருந்தது. மேலும், இது அரசியல் தொடரபான கதை எனவும் சொல்லப்பட்டது. மேலும். கமல் தனக்காக எழுதிய தலைவன் இருக்கிறான் படக்கதையை விஜய்க்காக கொடுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள்.
ஏனெனில், கமலுன் ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் உருவாகவிருந்தது. ஒரு வருடத்திற்கு மேல் இப்படத்தின் வேலைகள் நடந்து வந்தது. கமல் ஏற்கனவே எழுதிய ‘தலைவன் இருக்கிறான்’ கதையைத்தான் படமாக எடுக்கவிருந்தனர். ஆனால், கமல் என்ன நினைத்தாரே ‘நீங்கள் வேறு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள். நம்முடைய படம் தாமதமாகும்’ என ஹெச்.வினோத்திடம் சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான் விஜயிடம் கதை சொல்லி ஜனநாயகன் படம் டேக் ஆப் ஆனது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தில் முடியவுள்ளது.
படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் ஜனவரி மாதம்தான் என்பதால் மற்ற பணிகளுக்கு 6 மாதங்கள் இருக்கிறது. எனவே, போஸ்ட் புரடெக்சன் பணிகளை வினோத் நேரமெடுத்தே செய்வார் என்கிறார்கள். அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த விஜயின் அரசியல் பணிகள் வேகமெடுக்கும் என்கிறர்கள்.