ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!

0
258

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!

பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து பரபரப்பாக பேசப்படுபவர் ஜானி மாஸ்டர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவரது துள்ளலான நடன அமைப்பிற்காகவும், இந்த மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும் சிலாகிக்கப்படுபவர் ஜானி மாஸ்டர். அவர் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் படத்துக்கு திரைப்படம், “யதா ராஜா ததா பிரஜா” என்று பெயர் வைக்கப்பட்டுஇன்று அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது.

இந்த படத்தை சினிமா பண்டி என்ற படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீனிவாஸ் விரட்டலா இயக்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சர்வானந்த் திரைக்கதையை வழங்கி பாராட்டினார். சல்மான் கானின் மைத்துனர் ஆயுஷ் சர்மா கேமராவை ஆன் செய்தார். துரோணா படத்தின் இயக்குனர் ஜே.கருண்குமார் முதல் காட்சியை எடுத்தார். படத்தை எழுதி இயக்கிய ஸ்ரீனிவாஸ் விட்டலா, விகாஸும் இணைந்துள்ளனர்.

சமீபகாலத்தில் ஜானி மாஸ்டர் கொரியோகிராஃப் செய்த புட்டபொம்மா மற்றும் அரபிக்குத்து ஆகிய பாடல்கள் உலகளவில் ஹிட்டாகின. இந்த இரு பாடல்களும் இணையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டன. இந்த இரு பாடல்களில் இடம்பெற்ற நடன அசைவுகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாக மில்லியன் கணக்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்நிலையில் இப்போது ஜானி மாஸ்டர் ஹீரோவாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!..
Next articleஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் எங்கு நடக்குது தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here