ஜப்பான் கப்பலில் சிக்கிய பயணிகளுக்கு விடுதலை: புதிய தகவல்

0
187

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பல் ஒன்றில் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்த நிலையில் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அச்சம் ஏற்பட்டதால் அந்த கப்பலை எந்த துறைமுகமும் அனுமதிக்கவில்லை. இதனால் நடுக்கடலில் சுமார் 3000 பயணிகளுடன் சென்ற கப்பல் கடந்த இரண்டு வாரங்களாக நின்று கொண்டிருந்தது

இந்த நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பலில் இருக்கும் பயணிகள் ஒரு சிலரை வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பானின் மருத்துவ குழு ஒன்று கப்பலுக்குள் சென்று அங்கிருந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்றதா என கண்டறியப்பட்டு வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு மீதமுள்ளவர்களை உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்தது.

இதன் காரணமாக இன்று முதல் கட்டமாக சுமார் 500 பேர் வெளியேறுவார்கள் என்றும் படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழர்கள் உள்பட பயணிகள் அனைவரும் விடுதலை கிடைத்துவிட்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்

Previous articleகுஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!!
Next articleரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்த 60 பேர் கைது: என்ன காரணம் தெரியுமா?