தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

Photo of author

By CineDesk

தொடங்கியது ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது டிசம்பர் 20ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் என்றும்

டிசம்பர் 23ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பாஜக காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் தற்போது அமைச்சர்களாக உள்ள ராமச்சந்திரா வன்சி காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் ஊரான் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.