ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

0
183

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு வன்முறையுடன்பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு நிலையில். வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக பின்தங்கியது. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுவர்தாஸ் தன் சொந்த தொகுதிலேயே பின் அடைந்தார்.

காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது.

தற்போதைய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை விட அதிக தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றது.

இந்த கூட்டணி 46 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்மூலம் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த கூட்டணி மெஜாரிட்டியை நெருங்கி உள்ளதால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous article“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” – மாணவி ரபிஹாஅதிரடி
Next articleதனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here