ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 63.12 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்படுகிறது.
இதில் 13 தொகுதிக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது நக்சலைட் பாதிப்புள்ள மாநிலம் என்பதாலும் பல பகுதிகளில் பின்தங்கிய என்பதாலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. மொத்தம் 37 லட்சத்து 83 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.
மொத்தம் 4 ஆயிரத்து 862 வாக்குச்சாவடிகளில் 467 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். நிறைய இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு வன்முறை சம்பவங்கள் நடந்தன என போலீசார் தெரிவித்தனர்.
மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க பட்டது.
13 தொகுதிக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 63.12 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்த கட்ட தேர்தல் வரும் டிசம்பர்7, 12,16 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன