ஜேசன் சஞ்சயின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள்!! விஜய்யின் அரசியல் தான் காரணமா!!

Photo of author

By Gayathri

ஜேசன் சஞ்சயின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள்!! விஜய்யின் அரசியல் தான் காரணமா!!

Gayathri

Jason Sanjay's shooting problems!! Vijay's politics is the reason!!

லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் படம் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் படத்தினுடைய படப்பிடிப்புகள் 3 நாட்கள் கூட முழுமை பெறாத நிலையில் திடீரென லைக்கா நிறுவனம் இதை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சந்தீப் கிஷன் அவர்களை வைத்து ஜேசன் சஞ்சய் இயக்கம் இருந்த திரைப்படம் ஷூட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில் சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்ததாகவும் இந்த சிக்கல்களை லைக்கா நிறுவனத்தால் சரிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு சிக்கல்கள் வருவதற்கு விஜய் அவர்களின் அரசியல் பயணமும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜேசன் சஞ்சய் அவர்கள் குறும்படங்களை இயக்கிய நிலையில் பெரிய படங்களை இயக்குவதற்கான முன் அனுபவம் அவருக்கு பெரிதளவில் இல்லை என்றும் படப்பிடிப்பு தளங்களில் நிகழக்கூடிய விஷயங்களை சரிவர கையாளுவதற்கு இவருக்கான அனுபவம் பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லைக்கா நிறுவனத்தின் உடைய கடைசி இரண்டு படங்கள் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றும் அவற்றிலிருந்து ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தை மீண்டும் வெற்றியடைய செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பில் இவ்வளவு சிக்கல்கள் வருவதால் ஜேசன் சஞ்சயனுடைய திரைப்படத்தை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றி விடுவதற்கான வேலைகள் தற்பொழுது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.