சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை

Photo of author

By CineDesk

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனரால் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை இன்று ஜாமீன் வழங்கியுள்ளது

இதன்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் ரூ.25 ஆயிரம் ரூபாய் ஜெயகோபால் தர உத்தரவிட்ட நீதிபதி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்

இந்த நிபந்தனையை ஜெயகோபால் தரப்பு ஏற்றுக்கொண்டதை அடுத்து விரைவில் ஜெயகோபால் ஜாமீனில் வெளியே வரவுள்ளார். முன்னதாக ஜெயகோபாலின் ஜாமீன் மனு விசாரணையின்போது ஜெயகோபால் மற்றும் அவரது உறாவினர் மேகநாதன் மீது குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது