அதிமுக தலைமை மீது அப்சட்டில் இருக்கும் ஜெயக்குமார்; மாநிலங்களவை எம்பி சீட்டு கொடுக்காததற்கு காரணம் இதுதான்!!

0
5

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டது. வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் காலியாக உள்ள ஆறு பதவிகளில் சட்டமன்ற பலத்தின் அடிப்படையில் திமுக சார்பாக 4 உறுப்பினர்களும் அதிமுக சார்பாக இரண்டு உறுப்பினர்களையும் தேர்வு செய்ய இருக்கின்றனர்.

திமுக சார்பாக வில்சன், எஸ் ஆர் சிவலிங்கம் மற்றும் சல்மா போட்டியிடுகின்றனர். திமுக ஒதுக்கீடு ஓர் இடத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து அதிமுகவில் உள்ள இரண்டு எம்பிகள் சீட்டு யாருக்கு என பல்வேறு கேள்விகள் எழுந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீட்டு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் ஜெயக்குமார் அதிருப்தியில் இருக்கின்றார். குறிப்பாக கடந்த 2021 தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பாஜக தான் காரணம் என வெளிப்படையாக ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பதவியில் இருக்க தனக்கு மட்டும் பதவி இல்லை என வருத்தத்தில் இருக்கின்றார்.

அதனால் அவருக்கே வாய்ப்பு அதிகம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.ஆனால் அதிமுகவின் வழக்கு விவரங்களை கையாளும் இன்பதுரை மற்றும் ஆதிதிராவிடர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவை தலைவர் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர் ஜெயக்குமார் அதிமுக தலைமை மீது மிகவும் வருத்தத்தில் இருக்கின்றார் என கூறப்படுகின்றது.

வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கோவையில் அவரிடம் அது தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அவசரமாக பொள்ளாச்சிக்கு செல்கிறேன் எனக்கூறி சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு விளக்கத்தையும் அவர் தற்போது வரை தரவில்லை.

மேலும் கடந்த ஜூன் இரண்டாம் தேதி வடசென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை திட்டத்திற்கு அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்தில் கூட ஜெயக்குமார் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாரை கலந்து கொள்ள அறிவுறுத்தியும் அவர் கலந்து கொள்ளவில்லை என அதிமுக வட்டாரங்கள் பேசி வருகின்றனர். மேலும் வரும் 2026 தேர்தலுக்கு ஒரு ஆண்டு உள்ள நிலையில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் மீண்டும் நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

ஆனால் மாநிலங்களவை சீட்டுக் கொடுக்காததால் ராயபுரம் தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றால் மாநிலங்களவை பதவியை ஒரே வருடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மாநில அரசியலில் இருக்க வேண்டும் என்றே இபிஎஸ் விரும்புகிறார் அதனால் ஜெயக்குமாருக்கு சீட்டு வழங்காமல் தவிர்த்து விட்டார் எனவும் கூறப்படுகின்றது.

Previous article2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி; சூடு பிடிக்கும் அரசியல் களம்!!
Next articleபான் கார்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு; இதை உடனே பண்ணிடுங்க இல்லைன்னா அபராதம்!!