ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!!
திமுக வாரிசு அரசியல் நடத்தவில்லை என்று சொல்பவர்களுக்கு நடந்து முடிந்த உள்கட்சி தேர்தல் பதிலளிக்கும். ஏனென்றால் திமுகவில் தனக்குப் பின்பு தனது வாரிசுகள் வராது என்று ஓர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அவரின் குடும்பம் முழுவதுமே தற்பொழுது அரசியலில் தான் உள்ளது. இது குறித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.இவர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில், அரசியலில் திமுக தனது குடும்பத்தை பெருமளவு ஆதிக்கமாக செலுத்தியுள்ளது. கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத முரசொலி செல்வத்தின் கால்களில் ஏன் விழுகிறார்கள்?? ஆனால் இவ்வாறு காலில் விழுந்தவர்கள் தான் பெரியாரிசம் பேசுகின்றனர்.
திமுகவில் மூத்த நிர்வாகிகளை யாரும் மதிப்பதில்லை. ஏன் திமுக தலைவர் ஸ்டாலினையே மதிப்பதில்லை. அவ்வாறு மதிக்காதால்தான் மூத்த தலைவரான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகினார். அதுமட்டுமின்றி மூத்த தலைவர்கள் பலர் இருக்கையில் தனது தங்கைக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளார். இது மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அரசியல் என்பதை மாற்றி அமைத்தது தான் எம்ஜிஆர் ,ஜெயலலிதா அவர்களின் ஆட்சி இருந்தது. ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் சர்வாதிகாரியாக நடந்து கொள்வேன் என கூறுகிறார்.
ஆனால் அவரால் கட்சிக்குள்ளயே அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை.ஜெயலலிதா அம்மா அவர்களின் ஒரு சதவீத துணிச்சல் கூட ஸ்டாலினிடம் இல்லை. ஏனென்றால் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் ஏதேனும் தவறு செய்தார்கள் என்றால் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்பொழுது வரை அதிமுக அமைச்சர்கள் மக்களை குறித்தும் பெண்களை குறித்தும் அவதூறாக தான் பேசி வருகின்றனர். இவ்வாறு இருக்கையிலும் முதலமைச்சரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு பொம்மை போல தான் தற்பொழுது ஸ்டாலின் உள்ளார். நாட்டில், மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு உள்ளார்.
ஒரு விழாவில் முதலமைச்சர் பேசி கொண்டு இருக்கையில் அதை கவனிக்காமல், நீ என்ன பேசுவது, நான் என்ன கவனிப்பது என்ற படி பொன்முடி ஏளனமாய் சிரித்தது அனைவரும் அறிந்ததே. அது மட்டும் இன்றி முதலமைச்சர் இருக்கும் அதே இடத்தில் அவருக்கு சிறிதளவு கூட மரியாதை கொடுக்காமல் என் டி ஆர் பாலு, எனக்கு செருப்பு எடுத்துக் கொண்டு வா என அவர் முன்னிலையில் கூறியது முதலமைச்சருக்கும் மரியாதை தராததை எடுத்துக்காட்டுகிறது. நாட்டு நடப்பை பற்றி அறியாமல் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என கூறினார்.