ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தருவதாக திடீரென்று தகவல் பரவியது. இதனால் அந்த இடத்தை சுற்றி காவல் துறையினர் முற்றுகையிட்டனர் சசிகலாவின் ஆதரவாளர்கள் அங்கு குவிய தொடங்கினார்கள்.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதுமே பரபரப்பு ஏற்பட்டது அதோடு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இடையே இந்த நிகழ்வு அதிர்ச்சியைக் கொடுத்தது இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொன் விழாக் கொண்டாட்டத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மறுபுறம் சசிகலா அதிமுகவின் பொன்விழாவை தனியாக கொண்டாடி வருகிறார். அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிநகரில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் நினைவு இல்லம் ஆன ராமாவரம் தோட்டத்தில் கல்வெட்டு வைத்திருக்கிறார் அதிமுகவின் பொதுச் செயலாளர் வி கே சசிகலா என்று பெயர் இடம் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றினார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன புரட்சி செய்தார் என்பதற்காக சசிகலா புரட்சித் தாய் என்று பெயரை மாற்றி இருக்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த எட்டு மாதங்களில் ஒரு நாளாவது அண்ணா, எம்ஜிஆர்,ஜெயலலிதா, உள்ளிட்டோர் நினைவிடங்களுக்கு வந்து மரியாதை செலுத்தினாரா அடுத்த வருடம் பொன்விழா வந்திருந்தால் அப்போதுதான் நினைவிடங்களுக்கு வருகை தந்திருப்பார் என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதோடு பொன்விழாக் கொண்டாட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது அதனை சசிகலாவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த 1996-ஆம் வருடம் சசிகலாவை சார்ந்தவர்கள் காரணமாகத்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது தன்னுடைய குடும்பம் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் சசிகலா என்று தெரிவித்து இருக்கின்ற அவர், சசிகலாவால் கட்சிக்காரர்கள் அனுபவித்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க இயலாது என கூறியிருக்கிறார்.
வானத்தில் இருந்து குதித்து போல நான்தான் புரட்சித் தாய் என தெரிவித்திருக்கிறார் என்ன புரட்சி செய்தார் என்ற காரணத்திற்காக இப்படி ஒரு பெயரை மாற்றியிருக்கிறார் என கேள்வி எழுப்பியதோடு, தியாகத் தலைவி என்ற பெயரை விட்டுவிட்டார் கட்சிக்காக அவர் எந்த தியாகமும் செய்ய வில்லை அவரை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் அவரிடம் தற்சமயம் சசிகலா அதை நேரடியாக எதிர்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் உட்பட ஒரு குழுவாக சென்று தான் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இதற்கு பதில் தெரிவித்த அவர் அந்த சமயத்தில் ஒரு தற்காலிக ஏற்பாடாக தான் அது நடைபெற்றது. தற்சமயம் எல்லோரும் ஒன்றாக உள்ளோம் பொதுக்குழுவில் எடுப்பதுதான் இறுதியான முடிவு அதன் காரணமாக, அவரை நீக்கிவிட்டோம். அவர் நீதிமன்றத்திற்கு போனார் அப்போது நாங்கள் செய்தது தான் சரி என்று நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் ஆணையமும் சசிகலாவிற்கும் கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டது என கூறியிருக்கிறார் ஜெயக்குமார்.
எங்கள் கட்சியை பொறுத்தவரையில் நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா மட்டுமே அவர் இல்லை என்றாலும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார் அவருடைய நல்லாசியுடன் தான் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஆனால் சசிகலா ஆரம்பத்தில் இருந்தே தன்னை தியாக தாய் என்று அழைத்து வந்தார் அவருடைய ஆதரவாளர்களும் அப்படியே அழைத்து வந்தார்கள். ஆனால் தற்சமயம் அவர் புரட்சித் தாய் என்ற பெயரில் கல்வெட்டு அமைத்து இருக்கிறார் அதற்கு காரணம் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் பூங்குன்றன் அவர்களின் ஆலோசனை தான் என்பது பலருக்கு தெரியாது. அவர் சமீபத்தில் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் சசிகலா தியாக தாய் என்று அடைமொழி வைத்திருப்பதால் தான் அவரால் அதிமுகவை கைப்பற்ற இயலவில்லை. ஆகவே அந்த அடைமொழியை மாற்றுங்கள் என தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை கவனித்த சசிகலாவின் ஆதரவாளர்கள் இதுதொடர்பாக அவரிடம் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவேதான் தற்சமயம் தியாகத் தலைவி என்பதை மாற்றி புரட்சி தாய் என அடைமொழி வைத்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.