திமுகவின் மானத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர்!

0
83

கிழக்கு கடற்கரை பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி வரையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம். அதேபோல மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 31ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் என்று அமல்படுத்தப்படும். இந்த மீன்பிடி தடைக்காலம் மூலம் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன் பிடிக்கச் செல்பவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை நம்பி பிழைபோரின் மீனவ குடும்பங்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உண்டாகிறது. இதனை கருத்தில் வைத்து மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

 

அதனடிப்படையில் தமிழ்நாட்டின் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக 1.75 லட்சம் கடல் மீனவர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அளிப்பதற்கு தமிழக அரசு சார்பாக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் வழியாக சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், இது தொடர்பாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய வலைதள பக்கத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ரூபாய் 500 ஐ புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017 ஆம் ஆண்டு 5000 என்று உயர்த்தி 1.63 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு கொடுத்தார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது 8000 ரூபாய் ஆனால் தற்சமயம் கொடுப்பதாக சொல்லி இருப்பது 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓஹோ இது தான் சொல்வதை தான் செய்வோம் என்பதா என கிண்டல் செய்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.