’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்!

0
160

’தலைவி’ ஃபர்ஸ்ட்லுக்கில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், பிரபல நடிகர் அரவிந்தசாம் எம்ஜிஆர் கேரக்டரிலும் நடித்து வரும் ‘தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் விஜய் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் உருவத்தை போன்று இந்த ஃபர்ஸ்ட்லுக் இருந்தாலும், முகம் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இந்த ஃபர்ஸ்ட்லுக் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முழு படத்தையும் பார்த்த பின்னரே இந்த படத்தை பற்றிய உண்மையான விமர்சனத்தை சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் 2020ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் விஜய் ஒரு டுவிஸ்ட்டை இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தேதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரியதர்ஷினி என்பவர் ‘தி அயர்ன் லேடி’என்ற பெயரில் இயக்கி வருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் ‘குவீன்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleதனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்
Next articleமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா