ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!!

0
193
Jayalalitha must be a Hindutva advocate.. Challenge to AIADMK!! He is the big fool!!
Jayalalitha must be a Hindutva advocate.. Challenge to AIADMK!! He is the big fool!!

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!!

நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பல இன்னல்களுக்கு ஆளானார். அதில் குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் இவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட ஜெயலலிதா அவர்கள் ஓர் இந்துத்துவ வாதியாக தான் இருந்தார் என ஆணித்தனமாக கூறினார். அதுமட்டுமின்றி அதிமுகவையும் இது குறித்து விவாதத்திற்கு வரும்படி சவால் விட்டுள்ளார். பாஜக மற்றும் அதிமுகவிற்கு ஏற்கனவே ஏகா பொருத்தமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து அண்ணாமலை இவ்வாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து சித்தரித்து பேசுவது மீண்டும் அவர்களிடையே கோபத்தை எழுப்பியுள்ளது.

https://x.com/Gayatri_Raguram/status/1795067257749401881

ஜெயலலிதா அவர்கள் இந்துத்துவவாதி என மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதில் அண்ணாமலை மும்முரம் காட்டி வருகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஜெயலலிதா அவர்கள் இந்துத்துவ வாதியாக இருந்திருந்தால் எப்படி ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் பொழுது நோன்பு கஞ்சிக்காக அரிசியை வழங்கியிருப்பார் என்று பல கேள்விகளும் இவருக்கு எதிராக எழுப்பி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு அண்ணாமலை பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், ஒரு எல்கேஜி மாணவன் கூட இந்த முட்டாள் மனிதனுடன் விவாதம் செய்ய மாட்டான். மேற்கொண்டு ஒரு முட்டாள் மற்றும் பைத்தியக்காரனுடன் விவாதிப்பது என்பது நேரத்தை வீணடிக்க செய்வது தான் என விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது தற்பொழுது எக்ஸ் தளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

Previous articleசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு காப்பீட்டு திட்டம்! திருவாங்கூர் தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு! 
Next articleஅடுத்த பிரதமர் யார்? டெல்லிக்கு விரையும் முக ஸ்டாலின்! ஒன்றுகூடும் 28 கட்சி தலைவர்கள்!