ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! 

Photo of author

By Rupa

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! 

Rupa

Jayalalithaa is a giant.. half of it is mine!! Ex-minister warned to restrain the tongue!!

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!!

கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து தற்பொழுது திமுகவில் இணைந்ததை அடுத்து நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாக பேசினார்.

இவ்வாறு அவர் பேசியதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இவர் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தற்பொழுது திமுகவில் உள்ள கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா அவர்களை ராட்சசி என்றும் அவரை நான் அறிமுகம் செய்து வைத்தது பாவத்தின் பாதி பங்கில் என்னை அடையும் என்றவாறு பேசினார்.

இவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது மாற்றி அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டுள்ளார் அதில், நன்றி கெட்ட கே கே எஸ் எஸ் ஆர் உங்கள் பேச்சில் பாகடக்கம் தேவை என்று கண்டித்துள்ளார்.

தமிழ்நாடு 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் காரணம். அவர்கள் எடுத்து வைத்த திட்டங்கள் தான் தற்பொழுது வளர்ச்சி அடைந்து தமிழகத்தை முன்னோக்கி செல்ல ஊன்றுகோலாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி நீங்கள் அமைச்சராக இருப்பதற்கான அடையாளத்தை காட்டியதே அதிமுக தான் என்பதை ஒருநாளும் மறந்து விடாதீர்கள். உங்களுக்காக உழைத்ததில் அதிமுக தான் நேரத்தை வீணாக்கி தவறிழைத்து விட்டது.

அம்மாவை பற்றி அவதூறாக பேசும் உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் தான் ஜெயலலிதா அம்மா அவர்கள் என்பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள் எனக்கு கூறி இறுதியில் யாகாவாராயினும் நாகாக்க என்று முடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.