வழக்கின் தீர்ப்புக்கு முன்பே பேசிக்கொண்ட ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி!

Photo of author

By Gayathri

வழக்கின் தீர்ப்புக்கு முன்பே பேசிக்கொண்ட ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி!

Gayathri

Jayam Ravi and his wife Aarti who spoke before the judgment of the case!

நடிகர் ஜெயம் ரவி: இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவருக்கு 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய மனைவி பெயர் “ஆர்த்தி”. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விட்டு பிரிய போவதாக கூறினார்.

இந்நிலையில் “2009ஆம் ஆண்டு” நடந்த எங்கள் திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற கோர்ட், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்குமான வழக்கை கடந்த “15-ஆம் தேதி” நடத்தியது. இதில் ஆர்த்தி நேரில் கலந்து கொள்ளாமல், “காணொளி மூலம்” ஆஜரானார். ஜெயம் ரவி அவர்கள் நேரில் ஆஜராகி இருந்தார்.

பின்னர் விசாரணையை தொடங்கிய “குடும்ப நல கோர்ட் நீதிபதி” அவர்கள், விசாரணைக்கு பின், “சமரச தீர்வு மையத்தில்”, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தை நடத்தும் படி உத்தரவிட்டார். நேற்று சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகிய நிலையில், இருவரும் “சுமார் 1.15 மணி” நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்கு முடிந்த நிலையில், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் “7ஆம் தேதி” தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை கேட்டபோது, சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வு காண, முன்னேற்றமும் இல்லாததுதான் காரணம் என்கிறார்கள்.