ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

Photo of author

By அசோக்

ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

அசோக்

jayam ravi

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் ரவி. இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரே அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பல வருடங்களாக இந்த பெயரில்தான் இருந்தார். சமீபத்தில்தான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழையுங்கள் என கோரிக்கை வைத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது மும்பையில் தனக்கென ஒரு ஆபிஸ் துவங்கி அங்கிருந்தே சினிமா தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். இதனால் விமான நிலையத்தில் அடிக்கடி அவரை பார்க்க முடிகிறது.

ரவி மோகன் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. எனவே, ரவியின் மார்க்கெட் அவ்வளவுதான் என பலரும் பேசினார்கள். திடீரென பொன்னியின் செல்வன் ஹிட் கொடுத்தார். இப்போது சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். ஜெயம் ரவி வில்லனாக நடிக்கும் முதல் திரைப்படம் இது. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிறைய தோல்விப்படங்களை கொடுத்திருந்தாலும் ரவி மோகனை தேடி நிறைய இயக்குனர்கள் வந்து கதை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்களாம். அதில், சிலர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கும் கதைகளை சொல்கிறார்களாம். கதாபாத்திரம் தனக்கு பிடித்திருந்தால் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஜெயம் ரவி வில்லன் என்றால் 15 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். அதுவே ஹீரோ என்றால் அதை விட குறைவான சம்பளத்தை வாங்கி கொள்கிறாராம்.