ஆர்த்திக்கு ஷாக் கொடுத்த ஜெயம் ரவி.. Divorce க்கு பிறகு எடுக்கும் முக்கிய முடிவு!!

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து பல உள்ளங்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது, நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெற உள்ளது, ரசிகர்கள் மனதில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. எனினும் இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையே.
நடிகர் ஜெயம் ரவி சினிமா துறையில் நடிப்பைத் தாண்டி “இயக்குநராக” களமிறங்கியுள்ளார். அவர் இயக்கப்போகும் முதல் படத்தின் கதை நாயகன் “யோகி பாபு” என்னும் தகவலும் வெளியாகியுள்ள நிலையில் , இத்தகவலின் உண்மைநிலை சரிவரத் தெரியவில்லை.
மேலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ” பிரதர் ” திரைப்படம் வருகிற அக்டோபர் – 31 ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம் ரவி, இயக்குனர் எம் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பல பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. முதல் பாடலாக வெளியான மக்காமிஷி பாடல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் சிறப்பாக வெளியிடப்பட்டு வருகிறது.
ஜெயம் ரவி குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறுவது ;-
ஜெயம் ரவியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்குவதுதான் கடினம் என்றும் அவரிடம் ஓகே வாங்கி, கதை குறித்த தெளிவு அவருக்கு வந்துவிட்டால், அவர் இயக்கத்தில் தலையிட மாட்டார் என்றும் எம் ராஜேஷ் கூறியுள்ளார். “ஜெயம் ரவி ஒரு முழுமையான நடிகர் என்றும் அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்” என்றும் அதனால் ஜெயம் ரவியுடன் இணைந்து படம் செய்வது மிகவும் விருப்பமாக இருந்ததாகவும் எம் ராஜேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.