பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

0
169

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் தற்போது தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் மட்டுமே படங்களை வாங்குகிறது.

இதனால் மணிரத்னம் ரிலீஸுக்கு  முன்பே லாபம் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.அதே போல தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கொடுத்துள்ள சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நடித்த மற்ற எல்லோரையும் விட ஜெயம் ரவிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் படத்தில் மற்ற நடிகர்களை விட அவருக்குதான் முக்கியத்துவம் அதிகம் என்றும் அதிக நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரம், கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா ராயை விட ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழ் & கன்னடத்தில் உருவாகும் சந்தானத்தின் படம்… தலைப்பு இதுதானா?
Next articleஅரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?