மாலையும் கழுத்துமாக திருமண காலத்தில் நிற்கும் ஜெயம் ரவி பிரியங்கா மோகன்! வைரலாகும் புகைப்படம்! 

 

நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் இருவரும் கழுத்தில் மாலையுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தகவல்கள் பரவி வருகின்றது.

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி இருவரின் விவாகரத்து பிரச்சனை தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய இந்த பிரச்சனையாக பேசப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சனை குறித்து அவர்கள் தரப்பில் பேசுகிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்களில் மற்ற. அனைவராலும் பேசப்படும் ஒன்றாக இருக்கின்றது.

நடிகர் விஜய் ஜெயம் ரவி அவர்கள் ஆர்த்தியை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இதையடுத்து நடிகர் ஜெயம் ரவி அவர்களின் சினிமா வாழ்க்கைக்கும் ஆர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் நுழையத் தொடங்கியுள்ளனர். நடிகர் ஜெயம் ரவி அவர்கள் நடித்து பல திரைப்படங்களை ஆர்த்தி அவர்களின் தாயார் தான் வெளியிட்டிருக்கின்றார் என தகவல்கள் பரவி வந்தது.

இதற்கு மத்தியில் நடிகர் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் தகவல்கள் பரவியது. இதையடுத்து கடந்த மாதம் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக பதிவிட்டிருந்தார். நடிகர் ஜெயம் ரவி அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தி அவர்கள் “ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவும் கேட்காமல் அறிவித்து விட்டார். இதில் எனக்கு விருப்பமே இல்லை. நான் ஜெயம் ரவி அவர்களுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.

மாலையும் கழுத்துமாக திருமண காலத்தில் நிற்கும் ஜெயம் ரவி பிரியங்கா மோகன்! வைரலாகும் புகைப்படம்! 

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மனைவி ஆர்த்தியை நடிகர் ஜெயம் ரவி அவர்கள் அன் பாலோ செய்து ‘The New Me’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பிரியங்கா மோகன் இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திடீரென்று பார்க்கும் பொழுது நடிகர் ஜெயம் ரவி அவர்கள் நடிகை பிரியங்கா மோகன் அவர்களை திருமணம் செய்து கொண்டது போல இந்த புகைப்படம் இருக்கின்றது. இதனால் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்த புகைப்படம் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் திரைப்படத்தின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் ஏன் இது போன்ற கேவலமான செயல்களை செய்து வருகின்றனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் பிரதர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் எம். ராஜேஷ் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். பிரதர் திரைப்படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ், பூமிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.