பாடகியுடன் எனக்கு தொடர்பு..உண்மையை போட்டுடைத்த நடிகர் ஜெயம் ரவி!!

0
442
Jayamravi explains about being in touch with the singer
Jayamravi explains about being in touch with the singer

 

பாடகியுடன் தொடர்பு இருப்பதால் தான் நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஜெயம் ரவி அவர்கள் தொடர்ந்து இதயத்திருடன், சம்திங் சம்திங், எம் குமரன், பேராண்மை என்று பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் குடும்ப வாழ்க்கை சிறப்பாகத்தான் இருந்து வந்தது.

இவ்வாறு இருக்க நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளப்பக்கத்தில் கூறினார். இதையடுத்து சில தினங்கள் கழிந்து அவருடைய மனைவி ஆர்த்தி அவர்கள் என்னுடைய விருப்பமே இல்லாமல் ஜெயம் ரவி அவர்கள் விவாகரத்து தொடர்பான முடிவை வெளியிட்டுள்ளார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளன்று ஆர்த்தியுடன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வாறு இருக்க கோவா பாடகி கெனிஷா அவர்களுடன் இருக்கும் உறவு காரணமாகத் தான் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. இதற்கு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து நடிகர் ஜெயம் ரவி அவர்கள் “நான் எடுத்துள்ள விவாகரத்து முடிவு ஆர்த்தி அவர்களுக்கு தெரியாது என்று சொல்வதில் லாஜிக் இல்லை. விவாகரத்து தொடர்பாக ஆர்த்திக்கு இரண்டு முறை நான் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றேன். இது குறித்து அவர்கள் தரப்பில் இரண்டு முறை பேசியுள்ளார்கள். இவ்வளவு நடந்தும் ஆர்த்தி அவர்கள் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கின்றேன். நான் சட்டரீதியாக செய்கின்றேன்.

பாடகி கெனிஷா அவர்களுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதில் எனக்கு எதுவும் இல்லை. அவ்வாறு தொடர்புபடுத்தி பேசுபவர்களுக்குத்தான் அது அசிங்கம். கெனிஷா அவர்கள் பாடகி மட்டுமல்ல. அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். கெனிஷா அவர்கள் எத்தனையோ பேரை மன அழுத்தத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்துள்ளார்.

நான் பாடகி கெனிஷா அவர்களுடன் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் ஒன்றை தொடங்கலாம் என்று இருக்கின்றேன். இதை தொடங்கக் கூடாது என்ற எண்ணத்தில் இவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானும் கெனிஷா அவர்களும் சேர்ந்து ஹீலிங் சென்டர் தொடங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு இரண்டு நபர்களை தொடர்புபடுத்தி பேசுவது மிகவும் தவறான செயல் ஆகும். நான் சட்டத்தை மிகவும் நம்புகிறேன். இதற்கு சரியான நியாயம் கிடைக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleபுதிய முயற்சியில் களமிறங்கும் போக்குவரத்து கழகம்! இனி பொதுமக்களுக்கு இதெல்லாம் ஈஸி தான்!
Next articleAnaemia: இரத்த சோகை இருந்தால் இந்த அறிகுறிகளெல்லாம் தென்படும்!! உடனே செக் பண்ணுங்க!