2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நண்பன். இதில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் திரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.
இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
நண்பன் படத்தில் ஒரு ரேகிங் காட்சி வரும். அதில் நானும், ஜீவாவும் அண்டர் வியர் போட்டபடி இருப்போம். அந்த நேரத்தில் மிகவும் சங்கடமான நிலை என்னவென்றால் 200 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் 250 படக்குழுவினர்கள் என சுமார் 500 பேர் முன்னிலையில் அம்மணமாய் நிற்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது தான். அப்படி ஒரு கொடுமை இருக்கவே முடியாது.
அப்போது ஒரு காட்சியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் விஜய்யை சுற்றி வந்து அவரது பாக்கெட்டில் தண்ணீர் ஊற்றும் காட்சியில் நடிக்க வேண்டும். அந்த ஷாட் 12 முதல் 13 டேக் போனது. அப்பொழுது அவரிடம் எப்படியாவது இந்த சீனை முடித்து விடு நாங்கள் உன் காலில் கூட விழுகிறோம் என நானும் ஜீவாவும் தெரிவித்தோம் என ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
அப்பொழுது கோபம் கொண்ட அசோசியேட் இயக்குனர் அவர்கள், அறிவில்லை உனக்கு. எத்தனை தடவ நடிப்பே’ என அந்த ஆர்டிஸ்டை திட்டி விட்டார் என்றும் கூறியிருக்கிறார்.
அங்கே வந்த ஷங்கர், தனது அசோசியேட் இயக்குனரிடம், ‘என்ன கத்துறீங்க. ஆர்ட்டிஸ்ட் தப்பா பண்ணா நாமதான் சொல்லிக் கொடுக்கணும். அவங்க சரியா பண்ணல அப்படின்னா அதற்கு நாம தான் காரணம் என்று அவரை திட்டியுள்ளார். மேலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சங்கர் அவர்கள் அடுத்த டேட்டிலேயே அந்த காட்சியை ஓகே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.