சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்தது புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் ஏற்றவுடன் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மக்களிடையே பெரிதும் மதிப்பை பெற்று வருகிறார்.
ஆந்திராவில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளர்.
நேற்று ஆந்திர சட்டசபையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க இந்த மசோதா பயன்படும் என தெரிவித்தார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக தனியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!
இந்த மசோதா குறித்து விரிவாக சட்டமன்றத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல எம்.எல்.ஏ-களும் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜெகன் மோகன், அந்த பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், இது போன்ற கல்வி கொள்ளையை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.