தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திமுகவின் அதிரடி அறிவிப்பாக வெளியானது தான் நகைக்கடன் தள்ளுபடி. 5 பவுன் நகைக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளின் மீதான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு வெட்டி வாகை சூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.
ஒரு அளவுக்கு மக்கள் பாராட்டும் வகையிலே கடந்த ஐந்து மாதங்களாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. மக்களுக்காக பல நவீன திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
கல்வி இடைநிற்றல் மற்றும் தொடக்க கல்வியை முன்னேற்றும் விதமாக ‘இல்லம் தேடி கல்வி’ என்னும் திட்டத்தை முதலைமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு அதிரடி தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.
மகளிருக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயண டிக்கெட் என்னும் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
எனினும் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் இன்னும் கிடப்பில் இருப்பதாகவே மக்கள் உணர்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நகைக்கடன் தள்ளுபடிக்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட்ட ஊழல்களை விசாரித்து வருவதால் தாமதம் ஆவதாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார்.
அப்போது 40 கிராம் க்கு குறைவான நகைகள் மீதான தள்ளுபடியில் அரசாணை தயாராகி விட்டதாகவும், விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.