நகைக்கடன் தள்ளுபடி அரசாணை, புதிய செய்தி!

0
129
Jewel loan discount order released

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவுகள், மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலாகும் எனத் தெரிய வருகிறது. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும், “நிலுவையிலுள்ள ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும்,கூட்டுறவு சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது பொதுமக்களின் வைப்புத் தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தள்ளுபடி தொகையினை அரசே வழங்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகைக்கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்” எனவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleபிறந்தநாளுக்கு 7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நடிகர்
Next articleஇன்றைய (02-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.!! யாருக்கு லாபம்.!!