சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு !!

0
158

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று தங்கத்தின் விலை சற்று உயர்வுடன் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு,மற்றும் பல்வேறு காரணிகளை கொண்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் வகித்து வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவரனுக்கு ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி உச்சத்தைத் தொட்ட நிலையில் , தற்பொழுது விலை குறைந்ததால் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை அமைந்து வருகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில், ஒரு சவரன் ரூ.328 உயர்ந்து, ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.41 உயர்ந்து, ரூ.4,805 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய். 38,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூபாய். 59.30-க்கும் ,ஒரு கிலோ வெள்ளி ரூ.59, 300 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!
Next article#Breaking பாடும் நிலா SPB-யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு!