தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
180
#image_title
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் எஸ்.ஜே சூரியா மற்றும் நடிகர் ராகவா லாரனஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் பாகம் 2014வது வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் மத்தியில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இரண்டாவது பாகத்திற்கு ஜிகர்தண்டா டபுளெக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜிகர்தண்டா 2 படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான், நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களையும் தீபாவளிக்கு வெளியிட அந்தந்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous articleபுதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!
Next articleதாயகம் திரும்பும் பெண் ஸ்டோக்ஸ்! ஏமாற்றத்தில் சென்னை அணி ரசிகர்கள்!