புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!

0
111
#image_title
புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான  சாஃப்ட் சிக்னல் விதிமுறையை ரத்து செய்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் பல விதிமுறைகளை புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப் போகின்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அநேகமாக இந்த போட்டியில் இருந்து புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. அல்லது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரலாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிமுறைகள்:
* எல்.பி.டபிள்யூ விக்கெட்டுக்கு களநடுவர் சாஃப்ட் சிக்னல் கொடுக்காமல் 3ம் நடுவருடன் ஆலேசிக்க வேண்டும்.
* ஃபாஸ்ட் பவுலரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள பீல்டருக்கும், பேட்ஸ்மேனுக்கு அருகில் இருக்கும் பீல்டருக்கும் தலைக்கவசம் கட்டாயம்.
* ஃபிரீ ஹிட் பந்து போடும் போது பந்தானது ஸ்டம்பில் பட்டால் பேட்ஸ்மேன் ரன் ஓடலாம்.
* இந்த மூன்று விதிமுறைகளும் கட்டாயம் ஜூன் 1ம் தேதிமுதல் அமலுக்கு வருகின்றது.