நான்கு நடிகர்கள் வெளியிடும் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் டீசர்!!!

0
43
#image_title

 

நான்கு நடிகர்கள் வெளியிடும் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் டீசர்!!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தின் டீசரை இன்று(செப்டம்பர்11) மதியம் நான்கு பிரபல நடிகர்கள் வெளியிடுகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், கருணாகரன், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிகர்தண்டா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல்கள் கிடைத்தது. அதன்படி ஜிகர்தண்டா திரைபடத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஜிகர்தண்டா 2 திரைப்படத்திற்கு ஜிகர்தண்டா டபுளெக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு அதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூரியா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள நடிகை நிமிசா சஜயன் அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படத்தின் டீசர் இன்று(செப்டம்பர்11) மதியம் 12.12 மணிக்கு வெளியாகின்றது. இன்று(செப்டம்பர்11) மதியம் வெளியாகும் இந்த டீசரை பிரபல நடிகர்கள் தனுஷ், மகேஷ் பாபு, ரக்சித் ஷெட்டி, துல்கர் சல்மான் ஆகிய நான்கு நடிகர்களும் இணைந்து வெளியிடுகின்றனர். ஜிகர்தண்டா டபுளெக்ஸ் திரைப்படம் இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.