ஜியோ பயனர்களுக்கு ஒரு வருட ஹாட் ஸ்டார் சந்தா இலவசம் – ஆக்டிவேட் செய்வது எப்படி?

Photo of author

By Parthipan K

அலைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

தற்போது பொது முடக்கத்தில் OTT படம் பார்ப்பவர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜியோ நிறுவனம், தனது பிரீபெய்டு சந்தாதார்களுக்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஜியோ சந்தாதார்கள் 401 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால் வசதியுடன் 28 நாட்களுக்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே போல் 2599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்க்கு 740 ஜிபி டேட்டாவுடன் டிஸ்னி, ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக பெறலாம்.

இதன்மூலம், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் ஹாட் ஸ்டாரில் உள்ள பிரத்தியேக நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும்