தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

Photo of author

By Savitha

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

Savitha

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!
தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது ஒரு அங்கமான ஜியோ சினிமா செயலிக்கு பிரீமியம் தொகையை தொடங்கியுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம்  ஜியோ சினிமா செயலிக்கு ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏன் என்றால் நடப்பு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பால் பயன் அடைந்தது பலர் என்றாலும் பாதிக்கப்பட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம் என்று கூறலாம். ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் ஹாட்ஸ்டார் செயலியின் பயன்பாட்டை விட ஜியோ சினிமா செயலியின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜியோ சினிமா செயலி ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தில் ரூபாய் 999க்கு பிரீமியம் தொகை கட்டினால் ஹாலிவுட் படங்கள், ஹெச்.பி.ஓ(HBO), வார்னர் ப்ரோஸ்( Warnar Bros) ஆகியவற்றை 12 மாதங்களுக்கு இலவசமாக 4 சாதனங்களில் பார்க்கலாம். அதே சமயம் ஐபிஎல் தொடரையும் பாலிவுட் படங்களையும் இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ சினிமா அறிவித்துள்ளது.