எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

Photo of author

By Rupa

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

இந்த கொரோனா தொற்று காரணத்தினால் பலர் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.கொரோனா தொற்று காலமாக இல்லாவிட்டாலும் படித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக செய்து வருகின்றனர்.தமிழக அரசு தற்போது பல வேலை வாய்ப்புககளை வெளியிட்ட வண்ணமாகதான் உள்ளது.அதனை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தங்களிடம் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இவர்கள் நேர்முகத்தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம்: எய்ம்ஸ் மருத்துவமனை

பணியின் பெயர்: Medical superintendent, Financial Advisor, Superintending Engineer, Executive Engineer.

காலி பணியிடங்கள்: 04

சம்பளம்: ரூ.67,000 முதல் ரூ2,18000 வரை.

கல்வித்தகுதி:

Medical superintendent: Post Graduate, MD&MS தேர்ச்சியுடன் பத்து ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

 Financial Advisor: மத்திய,மாநில,யூனியன் பிரதேசங்கள்,பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் ஒத்த பதவி வகித்திருக்க வேண்டும்.

Executive Engineer: மத்திய பொதுபணித்துறை நிறுவனங்களில் உதவி அல்லது செயல்முறை பொறியாளர்களாக பணியாற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணபிப்பவர்கள் வயது 56 வயதிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பை பெற விரும்புபவர்கள் 06.09.2021 அன்றுக்குள் விண்ணப்ப படிவங்களை எய்ம்ஸ் மருத்தவமனைக்கு அனுப்ப வேண்டும்.இங்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படாமல் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவர்.