ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி நிறுவனத்தில் மாதம் ரூ.46,990/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
வானூர்தி மேம்பாட்டு நிறுவனத்தில்(Aeronautical Development Agency -ADA) காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி Project Assistant பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 வரை நேரடி முறைப்படி வரவேற்கப்பட இருக்கின்றன.
நிறுவனம்: ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி(ADA)
பணி: Project Assistant
பணியிடங்கள்: Project Assistant பணிக்கென மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் B.E,B.Tech,M.E,M.Tech,B.Sc,M.Sc உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: Project Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.46,990/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை
Project Assistant பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.ada.gov.in/currentdocs/ADV-122%20Walk%20In%20Interview.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: 14-09-2023