ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு! 10 வகுப்பு போதும்!

 

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை பணி செய்வதற்காக திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா, மானூர், தேவர்குளம், கங்கைகொண்டான், சீதபற்பநல்லூர், தாழையூத்து, சிவந்திபட்டி, சீவலப்பேரி, பகுதியில் இருந்து ஆண்களும், தென்காசி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட தாலுகா, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர்வடகரை, தென்காசி, குற்றாலம், இலத்தூர் பகுதிகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணியில் சேர 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

நல்ல உடற்தகுதியுடனும் இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

இப்பிரிவில் சேவை செய்ய விரும்புவோர் அவர்களது சொந்த தரவுகள்(Bio Data), கல்வி மற்றும் வயது சான்றிதழ் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவை வரும் 16-ம் தேதி பகல் 12 மணிக்குள் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment