ஜிவிகே எம்ரி நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன். வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 24 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும்.
அவசர கால மருத்துவ உதவியாளர்:
இப்பணிக்கு பிஎஸ்சி நர்சிங், எம்.எஸ்.சி தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19முதல் 30க்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யும் முறை: முதல் மற்றும் 2.ம் கட்ட தேர்வு தொலைபேசி வாயிலாக நடைபெறும். இறுதிக் கட்ட தேர்வு நேர்முகத் தேர்வாக இருக்கும்.
இத்தேர்வு இன்று (14ம் தேதி) தொடங்கி வரும் 19.ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து கூடுதல் விவரங்களை அறிய 91541 89421 என்ற எண்ணில் தொடப்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிக்கப்பட்டு உள்ளது.