வேலைவாய்ப்பு என்பது இந்திய பொருளாதாரத்தின் இதயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் உரையாடல் ஒன்றை இந்திய மக்களுக்காக நிகழ்த்த எரிசக்தி சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் முடிவு செய்தது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அதில், இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு, நிலைத்தன்மை, வளர்ச்சி ஆகியவை இதயம் போன்றது.
இதயம் இயங்காவிட்டால், உடலில் உயிர் போய்விடும் என்பது போல், இவற்றில் பாதிப்பு ஏற்பட்டால் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து. எனவே கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் வேளாண் துறையில் முன்னேற்றம் காணவேண்டும். பழங்குடியின மக்களும் தாங்கள் செய்யும் கைப்பொருட்கள், விவசாயங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு செலுத்துவதன் மூலம் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகும்.
அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கிராமங்களை ஸ்மார்ட் ஆக்குவதன் மூலம் தொழில் நகரங்களில் தொழில் மையங்கள் உருவாக்கப்படும். இவற்றை மேற்கொண்டு இந்தியாவின் முக்கிய பகுதிகளில் மட்டும் தொழில் நகரமாக மாற்றாமல் இந்தியா முழுவதையுமே தொழில் நகரமாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் எரிபொருள் சக்தியின் இறக்குமதிகள் குறைப்பதற்காக, எத்தனால், மெத்தனால் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களில் முதலீடு செய்ய தொழிலாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.