பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Photo of author

By Divya

பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.இதனால் தகுதியுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்.

துறை: இந்திய விமான நிலைய ஆணையம்

பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance)

காலிப் பணியிடங்கள்: மொத்தம் 342 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விருப்பம் காட்டும் நபர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு(Degree) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு வயது 28க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 4 கடைசி தேதி ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு மேலே சொல்லப்பட்டுள்ள தகுதி மற்றும் இப்பணி செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் AAI என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.