தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு!

தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் கைப்பற்றியது.இதனால் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினார்.மேலும் அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவப் படைகள் உடனே அங்கிருந்து வெளியேறின.

மேலும் அந்த நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.அந்த நாட்டில் தூதரகங்களும் மூடப்பட்டன.தற்போது தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.இதனால் காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்திய நாட்டைச் சேர்ந்த பலரும் நாட்டிற்கு திரும்பிவிட்டனர்.மேலும் பல நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இன்னும் வெளியேறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.இதனிடையே தாலிபான் அமைப்பு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்  அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் ஆகஸ்ட் 31க்கு மேல் வெளியேற அனுமதியில்லை எனவும் தாலிபான் அமைப்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

ஆப்கன் விவகாரம் தொடர்பாக ஜி7 மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசுகள் தலிபான்கள் இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இறந்த கோரிக்கையை மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டபடி அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு 12 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.