அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

Photo of author

By Vijay

உக்ரைன் எல்லையில், ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதால் போர் ஏற்படும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார்.

அமெரிக்க படைகள் அனைத்தும் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் இருக்கும்படி, அமெரிக்க அதிபர் பிடன் உத்தரவிட்டுள்ளார்.

இதன் விளைவாக உக்ரைனில் போர் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மற்றொரு பகுதியாக ஏற்கனவே உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்ய படைகளுக்கும், அமெரிக்காவின் நேட்டோ படைகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைனை எப்படியாவது மொத்தமாக ஆக்கிரமித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கருதுகிறது. ரஷ்யாவை பொருத்தவரை உக்ரேன் என்பது தங்கள் நாட்டின் ஒரு பகுதியான குறிப்பிடுகிறது.