அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன்!

Photo of author

By Sakthi

இந்தியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட குவாட் என்ற அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

முன்னதாக இந்த மாநாடு சென்ற ஆண்டு காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அந்தந்த பிராந்திய பிரச்சனைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

24ம் தேதி நடைபெற இருக்கின்ற இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் செல்ல இருக்கிறார். முன்னதாக இன்று தென்கொரியா செல்லம் ஜோ பைடன் தென்கொரிய அதிபர் மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரிகிறது. அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு அவர் முன்னெடுக்கும் முதல் பயணம் இது என சொல்லப்படுகிறது.