அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை!

0
119

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றையதினம் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவரும் துணை அதிபர் சார்பில் நின்ற கமலா ஹாரிஸ் என்பவரும் சேர்த்து, மொத்தம் 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வாக்காளர்கள் பெற்ற வாக்குகளை விட இதுவே முதல் தடவை அமெரிக்காவில் இதுபோல் அதிக மக்கள் வாக்குகள் பெற்றுள்ளது. 

அதுமட்டுமின்றி 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா பெற்ற 6.95 கோடி மக்கள் வாக்குகளை விட, தற்போது அதே கட்சியை சேர்ந்த ஜோ பைடன் 26 லட்சம் மக்கள் வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் அவர்களுக்கு 6.86 கோடி மக்கள் வாக்குகள் தற்போது கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் இணைந்து 7.2 கோடி மக்கள் வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி வாக்குப்பதிவுகளின்  எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleஉறவாடிக் கெடுத்த திமுக! அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்!
Next articleஇதனால தான் அவங்களுக்கு அனுமதி கொடுக்கல! முதல்வர் அளித்த விளக்கத்தால் வாயடைத்துப் போன முக்கிய கட்சி!