ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

0
150
#image_title

ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட்! அஸ்வின் சஞ்சு சாம்சன் குறித்து நெகிழ்ச்சி

 

ஜெய்ப்பூர்:

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 100 டெஸ்ட் மேலாக விளையாடியிருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறையாகும். ஜோ ரூட் பலமுறை ஏலத்தில் பெயர் கொடுத்திருக்கிறார்

ஆனாலும் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. இதனால் சில தொடர்களில் பெயர் கொடுக்காமல் போனார். தற்போது நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை காரணமாக பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் குவிந்துள்ளனர்.

#image_title

இந்த முறை ராஜஸ்தான் அணி ஜோ ரூட் ஐ ஏலத்தில் எடுத்துள்ளனர் பின்னர் பேட்டியளித்த ஜோ ரூட் நான் பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறையாகும் . மிகுந்த ஆர்வமாக உள்ளது.

கடந்த ஆண்டு இறுதி போட்டிவரை சென்றோம். இந்த முறை அது எங்களுக்கு சாதகமாக இருக்கும். மற்றும் பட்லர், சஞ்சு சாம்சன், அஸ்வின் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர்.

மேலும் அஸ்வின் உடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.அவரின் பல அனுபவங்களை கேட்டு நல்ல ஒரு ஞாபகங்களை சேகரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.